|
அன்புள்ள நண்பர்களே ! நாம் எது சாப்பிட்டாலும் வாய்க்கும் சுவையாக இருக்கவேண்டும்,உடம்புக்கும் நன்மை தர வேண்டும் . இந்த பூண்டு சட்னியை வாரம் இருமுறை சேர்த்துகொண்டாலே உடம்பில் கொழுப்பை கரைக்க ஆரம்பித்து விடும் .பூண்டின் மகிமையை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை
.
.
.தேவையான பொருட்கள் பூண்டு_1/4 கிலோ , தக்காளி -1 no, காய்ந்த மிளாகாய் -6no, ந.எண்ணெய் -100ml,உப்பு ,கடுகு,பெருங்காய தூள் மூன்றும் தேவையான அளவு எடுத்துகொள்ளவும் . .
செய்முறை பூண்டை நன்றாக உரித்து கொள்ளவும் . தக்காளியையும்,காய்ந்த மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.முதலில் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக எண்ணெய் காய்ந்ததும் அதில் உரித்து வைத்துள்ள பூண்டு,காய்ந்த மிளகாய், தக்காளி மூன்றையும் நன்றாக வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் ஆற விடவும். ஆறியவுடன் மிக்சியில் நன்றாக அரைத்தெடுக்கவும் .குறிப்பு அம்மியில் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.வாணலில் எண்ணெய் நிறைய ஊற்றி நன்றாக காய்ந்ததும், அதில் கடுகு,பெருங்காய தூளை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவையுடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் பூண்டு சட்னி சாப்பிடுவதற்கு ரெடி .இந்த சட்னி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்...சப்பாத்தி, இட்லி,தோசை,லெமன் சாதம் , புளி சாதம் இவற்றிற்கு அருமையாக இருக்கும்....

